4 வயது சிறுமி கடத்த முயற்சி, தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து, சினிமா பாணியில் தடுத்த சிசிடிவி காட்சிகள்

0 5855
பட்டப் பகலில் 4 வயது சிறுமியை கடத்த முயற்சி

டெல்லியில் 4 வயது சிறுமியை கடத்த முயன்றவர்களை தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து, சினிமா பாணியில் தடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஷகர்பூர் பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்த இருவர் தங்களை சேல்ஸ்மேன் என அடையாளப்படுத்திக் கொண்டு தண்ணீர் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த பெண் உள்ளே சென்றதும், வாசலில் இருந்த சிறுமியை அவர்கள் கடத்த முயன்றுள்ளனர். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து ஓடிவந்த பெண், கடத்தல்காரர்களின் பைக்கை கீழே தள்ளி தனது குழந்தையை அவர்களிடமிருந்து பிடுங்கியுள்ளார்.

கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்ப முயன்றபோது, இந்த சம்பவத்தை கவனித்த ஒருவர், அருகே இருந்த பைக்கை சாலையின் நடுவே நிறுத்தி கடத்தல்காரன் வந்த பைக்கை கீழே தள்ளியுள்ளார். ஆனால், அவரை உதறி தள்ளிவிட்டு கடத்தல்காரர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ள போலீசார், சிறுமியின் தாய் மாமனே பணத்திற்காக குழந்தையை கடத்த முயன்றதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments