சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அமெரிக்காவிற்கு ஜெய்சங்கர் மறைமுக அழைப்பு

0 6282
அமெரிக்கா உள்பட பல நாடுகளின் நம்பிக்கைக்குரியது இந்தியா- ஜெய்சங்கர்

இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழ்நிலையில், பெரிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அமெரிக்க வர்த்தக கவுன்சில் இணையவழி மாநாட்டில் உரை நிகழ்த்திய அவர், சீனாவின் உலகளாவிய சங்கிலித் தொடர்களை அறுத்து உலகநாடுகள் மருத்துவ சாதனங்கள் , தொலைத் தொடர்பு சாதனங்கள் போன்றவற்றில் சீனப்பொருட்களையே சார்ந்திருக்கும் சூழ்நிலையை மாற்றும் வல்லமை இந்தியாவுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சுமுகமான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இருப்பினும் அதனைவிட பெரிய உறவு நிலை இருநாடுகளுக்கும் இடையே இருப்பதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

இதே மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் சில தொலைபேசி உரையாடல்கள் வழியாக சாத்தியமாகக் கூடிய நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார்.

லண்டனில் இருந்து இந்த வர்த்தக மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, சீனாவுக்கு எதிராக மேலும் பல நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments