கடும் வருவாய் இழப்பால், ஏர் இந்தியா ஊழியர்களுக்கான சலுகைகள் 50 சதவீதம் வரை ரத்து

0 941

ஊழியர்களுக்கு ஊதியமில்லா விடுப்பு அளிக்கும் திட்டத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. ஊழியர்களுக்கான பல்வேறு படிகளை 50 விழுக்காடு வரை குறைத்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் ஊழியர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ஊதியம் இல்லா விடுப்பு அளிக்கவும், தேவைப்பட்டால் இதை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கவுமான ஒரு திட்டத்தை உருவாக்கியது.

இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், தேவைக்கு அதிகமாக ஊழியர்கள் உள்ளதைக் கண்டறிய ஒரு குழுவையும் அமைத்துள்ளது. இந்தக் குழு தனது அறிக்கையை மண்டல இயக்குநரிடம் பரிசீலனைக்காக ஆகஸ்டு 11ஆம் நாள் அளிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

இதேபோல் மாதம் 25ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வாங்குபவர்களுக்கான படியை 50 விழுக்காடு வரை குறைத்துள்ளது. தொழில் அகவிலைப் படி, வீட்டுவாடகைப் படி ஆகியவற்றைத் தவிர மற்ற படிகள் குறைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments