மனைவி குழந்தையை விட்டு காதலியுடன் பைக்கில் எஸ்கேப்..! நடு ரோட்டில் விரட்டிய பெண்..!

0 5000

திருப்பதி காவல் நிலைய வாசலில் மனைவி குழந்தையை தவிக்கவிட்டு, காதலியுடன் பைக்கில் தப்பிச்சென்ற கணவனைத் தடுக்க முடியாத அந்த பெண், மகளுடன் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பதி கிழக்கு காவல் நிலையத்திற்கு 8 வயது மகளுடன் சென்ற சரஸ்வதி என்பவர் தனது கணவர் வெங்கடாஜலபதி, வெறோரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த பெண்ணிடம் இருந்து கணவரை மீட்டுத்தரவேண்டும் எனவும் புகார் அளித்தார்.

விசாரணைக்கு தனது காதல் மனைவியுடன் வந்த வெங்கடாஜலபதி, தான் காதலியுடன் செல்ல விரும்புவதாகக் கூற, அவர் யாருக்கு சொந்தம் என்று இரு பெண்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அங்குள்ள போலீசார் வழக்கை விசாரிக்க மறுத்து, மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். எப்படியாவது தனது கணவன் தன்னுடன் வந்து விட மாட்டாரா? என்று தவித்த மனைவியும், மகளும் அவரது கையை பிடித்து இழுத்து பார்த்தும் பலனில்லை...

இதையடுத்து வெளியில் வந்ததும் பைக்கில் காதலியுடன் ஏறி புறப்பட்ட கணவனின் இருசக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்த மனைவி சரஸ்வதி போராடினார்.

காதலியுடன் செல்வதில் குறியாக இருந்த அந்த இரக்கமற்ற கணவன், மனைவியின் உறவினர்கள் பிரச்சனை வேண்டாம் என்று அமைதிப்படுத்திய நேரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில், காதலியுடன் அங்கிருந்து வேகமாக தப்பினான். பின்னாலேயே ஓடிச்சென்று அவன் மீது செல்போனை வீசி எறிந்து உரக்கக் கத்தி ஆவேசம் காட்டிய மனைவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சாலையில் நடுவில் அமர்ந்து தர்ணா செய்தபடியே அந்த பெண் கதறி அழ, தாயின் கண்ணீரைப் பார்த்த அந்த சிறுமி, ஆவேசமாக தந்தையின் செல்போன் நம்பரை செல்போனில் இருந்து நீக்கும்படி ஆவேசமாக கூறியது அவர்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்ய சட்டத்தில் இடமில்லை என்பது தெரிந்தும், சிலர் மனைவி குழந்தைகளைத் தவிக்க விட்டு வேறு பெண் தேடிச் சென்று விடுகின்றனர்.

அத்தகைய மிடில் ஏஜ் மன்மதன்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து காலம் தாழ்த்தினால், என்ன மதிரியான பரிதாப நிலைக்கு பெண்கள் தள்ளப்படுவார்கள் என்பதற்கு சாட்சியாகி இருக்கின்றன இந்த சோக காட்சிகள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments