சிக்கிய செல்போன் கொள்ளையர்... விரட்டிப்பிடித்த துணிச்சல் பெண்

0 3682
சென்னையில் செல்போன் பறிப்பு கொள்ளையர்களை ஐ.டி நிறுவன பெண் ஊழியர் ஒருவர் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்துள்ளார்.

சென்னையில் செல்போன் பறிப்பு கொள்ளையர்களை ஐ.டி நிறுவன பெண் ஊழியர் ஒருவர் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்
சென்று மடக்கி பிடித்துள்ளார். துணிச்சலுடன் செயல்பட்ட சென்னை பெண்ணை மாநகர காவல்துறை ஆணையர், நேரில் வரவழைத்து, பாராட்டு தெரிவித்துள்ளார்.

எந்த சூழலிலும், நிலை குலையாமல், துணிச்சலுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்திருக் கிறார், சென்னை - ஜாபர் கான்பேட்டையைச் சேர்ந்த கீதப்பிரியா என்ற இளம்பெண்.

தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் கீதப்பிரியா, பணி முடிந்து அலுவலக பேருந்துக்காக அசோக்நகர் 11 ஆவது நிழற்சாலையில் காத்துக் கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் இவரது கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய கொள்ளையனை, கீதப்பிரியா ஒரு கிலோ மீட்டர் தூரம் ஆட்டோவில் விரட்டி சென்று மடக்கி பிடித்தார்.

செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரும் சிறுவர்கள். இவர்களில் பிடிபட்ட ஒரு சிறுவனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற குமரன் நகர் போலீசார், தலைமறைவான அவனது கூட்டாளியை பிடிக்க, தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் அண்ணாநகரில் மோட்டார் சைக்கிள் திருட்டு - கிண்டியில் ஒருவரிடம் செல்போன்பறிப்பு - அசோக்நகரில் கீதப்பிரியாவிடம் கைவரிசை என கொள்ளையர்கள் இருவரும் சென்னையில் உலா வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதனிடையே, செல்போன் பறித்த கொள்ளையனை ஒரு கிலோ மீட்டர் தூரம் ஆட்டோவில் விரட்டிச்சென்று பிடித்த ஐ.டி நிறுவன பெண் ஊழியர் கீதப்பிரியாவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்து, ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்தார். துணிச்சலுடன் செயல்பட்ட வீர மங்கை கீதப்பிரியாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments