அசாமில் எரிவாயுக் கிணற்றில் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியின்போது மூவர் காயம்

0 912
அசாமின் பாக்ஜன் எரிவாயுக் கிணற்றில் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியின்போது வெளிநாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மூவர் காயமடைந்தனர்.

அசாமின் பாக்ஜன் எரிவாயுக் கிணற்றில் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியின்போது வெளிநாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மூவர் காயமடைந்தனர்.

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் எரிவாயுக் கிணற்றில் மே 27ஆம் தேதி கசிவு ஏற்பட்டது. ஜூன் ஒன்பதாம் தேதி அந்தக் கிணற்றில் தீப்பற்றிக் கொண்டது.

தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியின்போது தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து மழை பெய்வதாலும் அப்பகுதியில் தண்ணீர் சூழ்ந்துகொண்டதாலும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் 44 நாட்களாகப் பற்றி எரியும் எண்ணெய்க் கிணற்றை மூடும் முயற்சியின்போது இன்று மீண்டும் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது.

அதில் வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூவர் தீக்காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எரிவாயுக் கிணற்றின் மீது பெருமளவில் தண்ணீரைத் தெளித்தும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments