அயோத்தி ராமர் கோவில் கட்ட ஆக.5ல் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

0 1013
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு வரும் 5ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருப்பதாகவும், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு வரும் 5ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருப்பதாகவும், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி, ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் கோவில் கட்டுமானப் பணியை தொடங்குவதற்கான பூமி பூஜையில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ள இருப்பதாக கூறினார்.

அடிக்கல் நாட்டுவதற்கு முன்பாக அங்குள்ள கோவிலில் ராமரையும், அனுமான் கோவிலுள்ள அனுமனையும் பிரதமர் வழிபடுவார் என்று அவர் குறிப்பிட்டார்.

சுமார் 3 மணி நேரம் வரை பிரதமர் அயோத்தியில் இருப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும், பல்வேறு சாதுக்களையும் அவர் சந்திக்க இருப்பதாகவும் தேவ் கிரி கூறினார்.

கொரோனா அச்சுறுத்தலால், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அழைப்பாளர்கள் 150 பேர் உள்பட மொத்தம் 200 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பூமி பூஜையில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய, மாநில அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலர் பூமி பூஜையில் பங்கேற்க இருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments