புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்பு

0 1260
மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் பலர் மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு முன்பாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் பலர் மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு முன்பாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

மொத்தம் 61 பேர் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர். பாஜக சார்பில் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரசை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் முதன்முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பதவி ஏற்றனர். தமிழகத்தை சேர்ந்த ஜி.கே.வாசன், கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோரும் பதவி ஏற்றனர்.

தற்போது மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் காங்கிரஸின் பலம் 41 ஆக குறைந்துள்ளது. கூட்டத்தொடர் நடைபெறாத காலத்தில் மாநிலங்களவையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பது, நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments