சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு செல்வேன்-சபாநாயகர் காட்டம்

சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு செல்வேன்-சபாநாயகர் காட்டம்
சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் மீது வரும் வெள்ளிக்கிழமை வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்ற ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக சபாநாயகர் சிபி.ஜோஷி தெரிவித்துள்ளார்.
19 பேர் தகுதி நீக்கம் குறித்த சபாநாயகரின் நோட்டீசை கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள அவர், இதுவரை நீதிமன்றங்களின் உத்தரவை மதித்துள்ளதாகவும் ஆனால், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தமது அதிகாரத்தில் தலையிட்டதால், மாநிலத்தில் அரசியலமைப்பு ரீதியாலான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments