கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.394.14 கோடி வரப்பெற்றுள்ளது

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்தில் இதுவரை 394 கோடியே 14 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த மே மாதம் 14ம் தேதி வரை பல்வேறு தரப்பினரிடமிருந்தும் 367 கோடியே 5 லட்சத்து 38 ஆயிரத்து 343 ரூபாய் வரப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பின்னர் மே 15ம் தேதி முதல் ஜூலை 21ம் தேதி வரை 394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 21ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் நிதியுதவி அளித்தவர்களின் விவரங்களும் பட்டியலிடப்பட்டு அவர்களுக்கு முதலமைச்சர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.394.14 கோடி வரப்பெற்றுள்ளது #CMEdappadiPalaniswami | #Tamilnadu | #CoronaFund | #Coronavirus | #Covid19 https://t.co/B21TZyOOEX
— Polimer News (@polimernews) July 22, 2020
Comments