ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் விலை ரூ.1000 ?

0 2338
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனத்தின் கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு என்ற தடுப்பூசி, பிரிட்டனிலும், இந்தியாவிலும் சோதனை கட்டத்தில் உள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை வரும் டிசம்பர் மாத வாக்கில் 30 முதல் 40 லட்சம் டோசுகள் உற்பத்தி செய்யவும் ஆயிரம் ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக புனே சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனத்தின் கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு என்ற தடுப்பூசி, பிரிட்டனிலும், இந்தியாவிலும் சோதனை கட்டத்தில் உள்ளது.

சோதனைகள் வெற்றி அடைந்தால் இதுவே உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியாக இருக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் அடார் பூனாவால்லா தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை அடுத்த மாத இறுதியில் சுமார் 5000 பேரிடம் சோதித்துப் பார்க்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதன் முடிவுகள் வெளியாகி, உரிய உரிமங்கள் பெறப்பட்டபின்னர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தடுப்பூசி தடுப்பூசி விற்பனைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் விலை 1000 ரூபாய் வரை இருக்க வாய்ப்புள்ளதாக கூறிய அவர், உலக நாடுகள் தடுப்பூசியை வாங்கி இலவசமாக வழங்கும் என்பதால் மக்கள் விலையைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளில் உள்ள சுமார் 300 கோடி பேருக்கு தேவையான தடுப்பூசியை தயாரித்து வழங்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிலையில் விற்பனைக்கான இறுதி அனுமதி கிடைப்பதற்கு முன்பே தடுப்பூசி உற்பத்திக்கு சுமார் 1500 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான இந்த நிறுவனத்தை தங்களது கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்டாஜெனேகாவும் தேர்வு செய்துள்ளன.

இந்த தடுப்பூசி சோதனையில் ஆபத்தான எந்த பின்விளைவுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன், உறுதியான நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் T செல்களையும் அது உடலில் உருவாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மருத்துவ இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments