புதுக்கோட்டையில் தேர்தல் முன் விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதலில் 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

0 904
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமயம் அருகே கோசம்பட்டியில் பரமசிவம் மற்றும் உடையப்பன் கோசி ஆகியோரிடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் பரமசிவத்தின் ஆதரவாளர் திருநாவுக்கரசு என்பவர் சமூகவலைதளத்தில் உடையப்பன் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அரிவாளால் தாக்கிக் கொண்டனர். இதில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.

மோதலை கட்டுப்படுத்த முயன்ற கே.புதுப்பட்டி போலீசாரின் சமதான முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து அவர்கள் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர்.

இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பாதுகாப்புக்காக அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments