ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 38ஆயிரத்தை கடந்தது

0 2297
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 38ஆயிரத்தை கடந்தது

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, ஒரு சவரன் 38 ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் தங்கம் விலை, கடந்த சில மாதங்களாகவே கடுமையாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே ஒரு சவரன் 37 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் 38 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளது.

அதன்படி நேற்று 4,717 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று ஒரே நாளில் 56 ரூபாய் உயர்ந்து 4,773 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் நேற்று 37 ஆயிரத்து 736 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம், இன்று 448 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 184 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே போல் வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பார்வெள்ளி ஒரு கிலோ ஒரே நாளில் 5,800 ரூபாய் உயர்ந்து 65 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments