கொரோனா தடுப்பூசி இந்தியர்களுக்கு இலவசமாக கிடைக்க வாய்ப்பு

0 12978

இந்திய சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசிகளில் 50 சதவீதம், அரசுக்கு வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், தடுப்பூசி சோதனைகள் சிறப்பாக நடந்து முடிவுகள் சாதகமாக இருந்தால், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தங்கள் நிறுவனம் தயாரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசு கொள்முதலால் நோய்த்தடுப்பு நடவடிக்கையின் மூலம் மக்களுக்கு அம்மருந்து இலவசமாகவே கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். தடுப்பூசி தயாரிப்பில் முன்னனியில் உள்ள இந்திய சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியின் 3 ஆம் கட்ட மனித சோதனைகளை, இந்தியாவில் நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments