ஒரே நாளில் நடைபெறும் இரு தேர்வுகளால் மாணவர்கள் கவலைப் படத் தேவையில்லை - ரமேஷ் பொக்ரியால்

0 2481
JEE Main மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறுவதால் மாணவர்கள் கவலைப் படத் தேவையில்லை

JEE Main மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறுவதால் மாணவர்கள் கவலைப் படத் தேவையில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் JEE Main எழுதும் மாணவர்கள், தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வையும் எழுத பதிவு செய்துள்ள சூழலில், நிலைமையை ஆராய்ந்து சிக்கல் ஏற்படாதவாறு முடிவெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரு தேர்வுகளையும் மாணவர்கள் எழுதும் வகையில் ஆராய்ந்து முடிவெடுக்க தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

JEE Main தேர்வு செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையும், தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு செப்டம்பர் 6-ம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments