ராஜஸ்தானில் 19 எம்எல்ஏக்கள் மீது வரும் 24 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது - ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

0 1048
ராஜஸ்தானில் 18 எம்எல்ஏக்கள் மீது வரும் 24 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது

ராஜஸ்தானில் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் மீது வரும் 24 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று சபாநாயகருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக அதிருப்தியாளர்களாக மாறியதை அடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி 19 எம்எல்ஏக்ளையும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

சபாநாயகரின் நோட்டீசை ரத்து செய்யக் கோரி சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

அந்த வழக்கில் வரும் 24 ஆம் தேதி வரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்க கூடாது என்று இடைக்கால உத்தரவிட்டு, அன்றைய தினத்திற்கு தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments