நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர்தப்பிய இருசக்கர வாகன ஓட்டி

0 1386
நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர்தப்பிய இருசக்கர வாகன ஓட்டி

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் இருந்து இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவர் நூலிழையில் உயிர்தப்பிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி சியாங்ஜூர் என்ற இடத்தில் சிறிய குன்று ஒன்று சரிந்து சாலையில் விழத் தொடங்கியது.

அப்போது அந்த வழியே சென்ற வாகன ஓட்டி ஒருவர், தனது இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு சாதூர்யமாக தப்பிச் சென்றார். இதில் இருசக்கர வாகனத்தை மண் மூடியது.

இந்த வீடியோ அண்மையில் கோவாவில் எடுத்ததும் என்றும் மேகலாயாவில் எடுத்தது என்றும் தவறான செய்தி இணையத்தில் பரவி வந்த நிலையில், உண்மையில் இந்த வீடியோ இந்தோனேசியாவில் படம் பிடிக்கப்பட்டது என்று மேகலாயா போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments