சுஷாந்த்துக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் நோய் இருந்ததாக அதிர்ச்சி தகவல்

0 23455

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், பைபோலார் டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் மும்பை பாந்த்ரா போலீசார், அவரது நண்பர்கள், நடிகர், நடிகைகள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சுஷாந்துக்கு சிகிச்சை அளித்த 3 மனநல மருத்துவர்கள் மற்றும் சைக்கோதெரப்பிஸ்ட் ஒருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்த சுஷாந்த், அடிக்கடி மருத்துவரை மாற்றியதும், 2 மாதங்களுக்கும் மேலாக உட்கொண்டு வந்த மருந்துகளை பாதியில் நிறுத்தியதும் தெரிய வந்தது. மேலும் அவர்களுள் ஒரு மருத்துவர் சுஷாந்துக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் நோய் இருந்ததாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments