நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பில்லை - தமிழக அரசு

0 1482
உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காதவர்களுக்கும் நிவாரணம் வழங்க வாய்ப்பில்லை

நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க வாய்ப்பில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கும், உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க தவறியவர்களுக்கும் நிவாரணம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், நலவாரியத்தில் புதுப்பிக்க தவறியவர்கள் மற்றும் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விரிவான விசாரணைக்காக வருகிற திங்கட் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments