கொரோனா பணியில் உயிரிழக்கும் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக கருதப்படுவர்

0 1467
ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ 15 லட்சம் உதவி என தகவல்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, உயிரை இழக்கும் ராணுவ வீரர்களை, வீர மரணம் அடைந்தவர்களாக கருதி, அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கலாம் என்ற பரிந்துரைக்கு உள்துறை அமைச்சகம் கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பில் முன்கள பணியாளர்களாக நின்று, இந்த வகையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 15 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த குடும்பங்களுக்கு மக்கள் நேரிடையாக நன்கொடை கொடுக்கும் விதத்தில் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

பாரத் கி வீர் என்ற பெயரில் உள்ள ராணுவ வீரர்கள் உதவி நிதியில், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மக்கள் அளித்த நன்கொடையால் 250 கோடி ரூபாய் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments