சென்னை விமான நிலையத்தில் விரைவில் முழு உடல் ஸ்கேனர் கருவிகள்..!

0 2023

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடல் முழுவதையும் சோதனை செய்யும் ஸ்கேனர்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாதுகாப்பு சோதனைக்கு பயன்படுத்தப்படும் வாசல் வடிவ பிரேம்கள், கை பரிசோதனை கருவிகள் ஆகியவற்றால் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுவதை மாற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் 10 முழு உடல் ஸ்கேனர்களும், சர்வதேச முனையத்தில் 9 ஸ்கேனர்களும் நிறுவப்பட உள்ளதாக விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஸ்கேனர் கருவியை கடப்பதற்கு முன்னர் அனைத்து பயணிகளும் தங்களிடம் உள்ள உலோகத்தால் ஆன பொருட்களை அகற்ற வேண்டும் எனவும் கூறப்படுகிறது. முழு உடல் ஸ்கேனர் வருவதால் பாதுகாப்பு சோதனை விரைவாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் தற்போது பயன்பாட்டில் உள்ள சில வாசல் வடிவ பாதுகாப்பு சோதனை பிரேம்களும் தொடர்ந்து உபயோகத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments