மின் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக கூறி தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்...

0 2998

மின் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக கூறி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. 

சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கருஞ்சட்டை மற்றும் முகக்கவசம் அணிந்து, வீட்டு வாசலில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதே போல் கையில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பியும் ஸ்டாலின் ஆர்பாட்டம் நடத்தினார். அப்போது தமிழகத்தில் மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்று அவர் முழக்கங்களை எழுப்பினார்.

அண்ணாசாலையிலுள்ள திமுக இளைஞர் அணி தலைமையகமான அன்பகத்தில், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். 

சென்னை சிஐடி காலனியிலுள்ள இல்லத்தில் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருப்புக் கொடி ஏந்தியும், கண்டன முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

திமுகவின் கருப்புக் கொடி போராட்டத்தில் பங்கெடுக்கும் விதமாக, சென்னை அண்ணாநகரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன், மின் கட்டணம் அதிகரிப்பை கண்டித்து கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி தில்லை நகரில் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தனிநபர் இடைவெளியுடன் பங்கேற்ற திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தியும், கண்டன முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கரூர் மாவட்டம் இராமேஸ்வரபட்டியில் உள்ள வீட்டின் முன்பு திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அதில் கட்சி நிர்வாகிகளும் தனிநபர் இடைவெளியுடன் பங்கேற்று, கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷமிட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் சண்முகாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் திமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற  உறுப்பினருமான பொன்முடி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்களும் தனிநபர் இடைவெளியுடன் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன், நிர்வாகிகளுடன் இணைந்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தனது சொந்த கிராமமான சே.கூடலூரில் உள்ள தனது வீட்டில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். மின் கட்டணத்தில் சலுகை வழங்கக் கோரி கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments