நாடு முழுவதும் கொரோனாவால் 24 மணி நேரத்தில் 37,148 பேர் பாதிப்பு

0 1615
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால், அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 55 ஆயிரத்து 191ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால், அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 55 ஆயிரத்து 191ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 587 பேர் உயிரிழந்ததால், அத்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 28 ஆயிரத்து 84ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 4 லட்சத்து 2 ஆயிரத்து 529 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நிலையில், 7 லட்சத்து 24 ஆயிரத்து 578 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரத்து 695ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 30ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 75 ஆயிரத்து 678ஆகவும், டெல்லியில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 747ஆகவும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments