திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கவுண்ட்டர்களில் வழங்கப்பட்ட இலவச டோக்கன் ரத்து

0 1358
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜீயர், அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் என மொத்தம் 158 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், திருப்பதி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், தரிசனத்திற்காக உள்ளூர் பக்தர்களுக்கு கவுண்ட்டர்களில் வழங்கப்பட்டு வந்த இலவச டோக்கன் விநியோகம் இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வெளியூர்களில் இருந்து ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடையில்லை எனவும், ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments