மின் உற்பத்திப் பொருட்களை சீனாவுக்கு பதில் வேறு நாடுகளில் வாங்க இந்தியா முடிவு

0 2299
சீனாவுக்குப் பதில் ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பொருட்களை வாங்கத் திட்டம்

சீனாவுடனான மோதல் மற்றும் பிரதமர் மோடியின் உள்நாட்டு உற்பத்தி என்ற என்ற அழைப்பினைத் தொடர்ந்து இந்திய மின்சார உபகரணங்கள் உற்பத்தி மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் சீனாவுக்கு வழங்கிய ஒப்பந்தங்களை ரத்து செய்து வருகின்றன.

மேலும் வேறு நாடுகளில் இருந்து பொருட்களை வாங்குவதால் செலவு நிலை ஏற்பட்ட போதும் சீனத் தயாரிப்புகளை வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக இந்திய மின் மற்றும் மின்னணுவியல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.கே. சுக் தெரிவித்துள்ளார்.

இனி சீனப் பொருட்களுக்குப் பதில், ஜப்பான், தைவான், கொரியா மற்றும் ஜெர்மனி நாடுகளில் இருந்து மின் உபகரணங்களையும், மென்பொருட்களை ரஷ்யா, செக் குடியரசு அல்லது போலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments