மான்செஸ்டர் கிரிக்கெட் டெஸ்டில் 113 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

0 2504
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து டிக்ளேர் செய்ய, அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

182 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 129 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 312 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் தடுமாறினர். அந்த அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற, 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமன் செய்யப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments