சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா

சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமது மாமனார், மாமியார் ஆகியோருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, குடும்பத்தினருடன் ராதாகிருஷ்ணன் பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை ராதாகிருஷ்ணன் ட்விட்டர் மூலம் அளித்த பதில் ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனிடையே, குடும்பத்தினர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராதாகிருஷ்ணனும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா #Radhakrishnan | #Covid19 | #CoronaVirus https://t.co/0sE9fmZs9Z
— Polimer News (@polimernews) July 21, 2020
Comments