சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு -1,298 : இதுவரை உயிர்ப்பலி - 1,456

0 1695
சென்னையில் கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் சற்று உயரத் துவங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் புதிதாக ஆயிரத்து 298 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் சற்று உயரத் துவங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் புதிதாக ஆயிரத்து 298 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

இதனால், சென்னையில் மட்டும் சுமார் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரம், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.

அண்டை மாவட்டங்களான திருவள்ளூரில் அதிகபட்சமாக 454 பேருக்கும், செங்கல்பட்டில் 354  பேருக் கும் , காஞ்சிபுரத்தில் 329   பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆனது.

தூத்துக்குடி யில் 200, திருநெல்வேலியில் 180, விருதுநகரில் 169, திருவண்ணாமலையில் 151, கோவை யில் 139, வேலூரில் 114, தேனியில் 107, மதுரையில் 106 மற்றும் தென்காசியில் 103 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்து 687 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments