அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது

0 1497
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு  தொடங்கியது. 

ஊரடங்கால் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவுவதன் காரணமாக, முதல் முறையாக 109 அரசு கல்லூரிகளுக்கான ஆன்லைனில் விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு  இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதேபோல மாணவர்களுக்கு உதவ தமிழகம் முழுவதும் 36 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பது, இடங்கள், விண்ணப்பக் கட்டணம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 - 22351014, 044 - 22351015 என்ற எண்களுக்கு மாணவர்கள் அழைக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments