ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களை விற்று மெகுல் சோக்சி ஏமாற்றியுள்ளதாக தகவல்

0 2786
ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களை விற்று வாடிக்கையாளர்களை மெகுல் சோக்சி ஏமாற்றியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களை விற்று வாடிக்கையாளர்களை மெகுல் சோக்சி ஏமாற்றியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி செய்த வழக்கில் வைர வணிகர்கள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹாங்காங்கில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோருக்குச் சொந்தமான நிறுவனங்களில் இருந்து இரண்டாயிரத்து முந்நூறு கிலோ பட்டை தீட்டப்பட்ட வைரத்தைக் கடந்த மாதத்தில் அமலாக்கத்துறை எடுத்து வந்தது.

இவற்றில் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நிறுவனத்துக்குச் சொந்தமான வைரங்கள் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட விலை குறைந்த வைரங்களாகும் என அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

ஆய்வகங்களில் தயாரித்த வைரங்களை இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் விற்று மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நிறுவனம் ஏமாற்றியுள்ளது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments