மாணவ-மாணவிகளுக்கு மனநலம் பேணுவதற்கான மனோதர்பன் திட்டம் - நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர்

0 687
மாணவ-மாணவிகளுக்கு மனநலம் பேணுவதற்கான ஆலோசனைகளை வழங்க மனோதர்பன் என்ற திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை தொடங்கி வைக்கிறார்.

மாணவ-மாணவிகளுக்கு மனநலம் பேணுவதற்கான ஆலோசனைகளை வழங்க மனோதர்பன் என்ற திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா காலகட்டத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி, அட்மிசன் தொடங்கும் நிலையில், மாணவ-மாணவிகளுக்கு மனரீதியான அழுத்தங்கள் ஏற்படக் கூடும் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு தீர்வாகவே மனோதர்பன் திட்டத்தை நாளை காலை 11 மணிக்கு தொடங்கி வைப்பதாக ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

ஏற்கெனவே இதற்காக,  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணைய தளத்தில், குறிப்புகள், ஆலோசனைகள், வீடியோக்கள் இடம்பெற்றுள்ள வெப் பேஜ் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மாணாக்கர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில், கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த ஹெல்ப்லைன் மூலம், கலந்தாலோசனை வழங்குபவர்களும், உளவியல் வல்லுநர்களும் ஆலோசனை வழங்குவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments