ஐபிஎல் போட்டிகள் செப்.26 முதல் நவ.8 வரை நடத்த முடிவு ? - இந்திய கிரிக்கெட் வாரியம்

0 3299
ஐபிஎல் போட்டிகளை வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை நடத்தலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகளை வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை நடத்தலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அதன் ஆட்சி அதிகார குழு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எனினும் ஐசிசியின் ஒப்புதல் கிடைத்த பிறகு இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த, ஒளிபரப்பு உரிமை பெற்றுள்ள ஸ்டார் டிவி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி தினமான நவம்பர் 14 ஆம் தேதி போட்டிகள் முடிவடையும் வகையில் திட்டமிட்டால் மட்டுமே விளம்பர வருவாய் கிடைக்கும் என அந்த நிறுவனம் நினைப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஆஸ்திரேலிய பயணத்திற்காக நவம்பர் 10 ஆம் தேதி இந்திய அணி புறப்பட வேண்டிய கட்டாயம் உள்ளதால்,  நவம்பர் 8 க்குள் போட்டிகளை நடத்தி முடிப்பதில் பிசிசிஐ உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments