ஆன்லைன் வகுப்பு : தமிழக அரசினுடைய நிலைப்பாடு என்ன..? பதிலளிக்க உத்தரவு

0 1269
ஆன்லைன் வகுப்பு : தமிழக அரசினுடைய நிலைப்பாடு என்ன..?

பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள நிலையில் தமிழக அரசினுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன் லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், ஆன்லைன் வகுப்புகளுக்கான நேர கட்டுப்பாடுகள் குறித்து பதில் மனுவாக மத்திய அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்களை கவனிப்பதால் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்ற நோய் வர வாய்ப்புள்ளதாக மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் மத்திய அரசினுடைய வழிகாட்டுதலின் படி தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அடுத்த வாரம் திங்கட்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments