சென்னையில் போலி முகவரி கொடுத்து கொரோனா பரிசோதனை செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

0 2046
போலி தகவல்களால் கொரோனா நோயாளியை அடையாளம் காண்பதில் சிக்கல்

சென்னை மாநகராட்சியில் போலியான முகவரி கொடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த காய்ச்சல் பரிசோதனை முகாம் மற்றும் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர் முடிவுகள் வெளியாகும் வரை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற நிலையில், அதற்கு அஞ்சி ஒரு சிலர் போலியான தொலைபேசி எண் மற்றும் முகவரியை கொடுத்து பரிசோதனை செய்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று  பரிசோதனை செய்துகொண்ட 11,619 பேரில் 148 பேர் போலியான முகவரி உள்ளிட்ட தகவல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. போலி தகவல்களால் கொரோனா நோயாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments