நாட்டில் ஒரே நாளில் 40 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா

0 2602
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல நேற்று ஒரே நாளில் 681 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 18 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 497 ஆக உயர்ந்துள்ளது.

7 லட்சத்து 87 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3 லட்சத்து 90 ஆயிரத்து 459 பேர் சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிரத்தில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 793 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments