ஒரே நாளில் 2லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா

0 1355
உலக அளவில் புதிதாக 2லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

உலக அளவில் புதிதாக 2லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 46 லடசத்தை கடந்துள்ளது.

பல்வேறு நாடுகளில் ஒரே நாளில் 4300 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கையும் 6 லட்சத்து 8ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 65ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், அங்கு மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 லட்சத்தை நெருங்கிறது.

அதற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் 40 ஆயிரம் பேருக்கும், பிரேசிலில் 24 ஆயிரம் பேருக்கும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 716 பேர் உயிரிழந்ததால் அங்கு மொத்த பலி எண்ணிக்கை 80ஆயிரத்தை நெருங்குகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் புதிதாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பதிவாகவில்லை. வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 87 லட்சத்தை தாண்டியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments