அமெரிக்காவுடன் இணைந்து கடற்படைப் பயிற்சியில் ஈடுபட இந்தியா முடிவு

இந்தியா, சீனா இடையிலான பிரச்னைகளுக்கு நடுவே அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்தியா போர்ப் பயிற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா, சீனா இடையிலான பிரச்னைகளுக்கு நடுவே அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்தியா போர்ப் பயிற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் தற்போது இந்தோனேஷியா, மலேசியா இடையிலான மலாக்கா நீரிணையில் உள்ளதால் அதனுடன் இணைந்து போர்ப் பயிற்சி மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
தற்போது அதே பகுதியில் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் என்ற மற்றொரு விமானம் தாங்கி கப்பல், பாசெக்ஸ் என்ற பெயரில் ஜப்பானுடன் இணைந்து தென்சீனக் கடல் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனவே நடப்பாண்டின் இறுதியில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்தியா போர்ப் பயிற்சியில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments