கொரோனா அச்சம் -ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல்

0 2246
இறந்து பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனோ தொற்று இருப்பதாக கூறி அடக்கம் செய்ய மறுப்பு

இறந்து பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனோ தொற்று இருப்பதாக கூறி அடக்கம் செய்ய மறுக்கப்பட்டதை அடுத்து, அதை பெற்ற தந்தையே ஆற்றில் வீசிய பரிதாப சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

கர்நூல் மாவட்டம், ஸ்ரீவெல்லா வட்டம் கொட்டபாடு  என்ற கிராமத்தை சேர்ந்த  சம்சா வாலி என்பவர் நிறைமாத கர்ப்பிணியான தமது மனைவி மதார்பீ-யை ந ந்தியால் அரசு பொது மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளார். ஆனால் சனிக்கிழமை அன்று பெண்குழந்தை இறந்து பிறந்தது.

குழந்தையின் உடலை அடக்க கிராமத்து பெரியவர்களிடம் விடப்பட்ட கோரிக்கை, கொரோனா அச்சத்தால் நிராகரிக்கப்பட்டதால், வேறு வழியின்றி உடலை சாபோலு என்ற இடத்தில் கர்நூல்-கடப்பா வாய்க்காலில் சம்சா வாலி வீசியுள்ளார். வாய்க்காலில் குழந்தையின் உடல் மிதப்பதை கண்ட சிலர் போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு, கிராமத்தினரிடம் பேசி நல்லடக்கம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments