7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

0 4425
டெல்லியிலிருந்தபடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்

கொரோனா நிலவரம் குறித்து 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இக்காலத்தில் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கொரோனா தடுப்பு பணிகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது.

இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், இமாசல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தொலைபேசியில் மோடி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 7 மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள், மருத்துவ சிகிச்சை  விவரங்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments