சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம்

0 1801
சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம்

மேற்குவங்கத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் போலீஸ் வாகனங்களையும், அரசு பேருந்துகளையும் தீ வைத்து எரித்தனர்.

உத்தர் தினாஜ்பூரில் உள்ள காலகாச் ((Kalagachh in Uttar Dinajpur)) பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் போலீசாரின் 3 வாகனங்கள், 2 அரசு பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டு துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments