திருப்பதி விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து

ஓடுபாதையில் ஆய்வுக்கு சென்ற தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து
திருப்பதி சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால், அங்கு விமான சேவை நாளை காலை வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி சர்வதேச விமான நிலையத்தில் பெங்களூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க இருந்தது. இந்நிலையில், அதற்கான முன்னோட்டமாக, ஓடுபாதையில் ஆய்வுக்கு சென்ற தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு தரையிரங்க இருந்த விமானம் பெங்களூருக்குத் திருப்பிவிடப்பட்டது. மேலும், ஐதராபாத், விசாகப்பட்டினத்தில் இருந்து வர வேண்டிய விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டன. .
தீயணைப்பு வாகனத்தை அகற்றி ஓடுபாதையை அதிகாரிகள் சரி செய்த நிலையில், நாளை காலை வரை விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments