திருப்பதி கோயிலில் பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்ய பரிந்துரை எனத் தகவல்

0 4953

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவுவதை தடுக்கும்பொருட்டு பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்ய ஆந்திர அரசுக்கு தேவஸ்தானம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஊரடங்கிற்கு இடையே கடந்த 8 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 2 லட்சம் பக்தர்கள் வந்து சென்றுள்ளதாகவும் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், கோயிலில் பணியாற்றும் பெரிய ஜீயர் அர்ச்சகர், ஊழியர்கள் என 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்களிடம் இருந்து பக்தர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு தரிசனத்தை ரத்து செய்ய மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தேவஸ்தான தகவல்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments