வீட்டுக்குள் புகுந்து நாய்க்குட்டியை கவ்வி சென்ற சிறுத்தை

0 3891
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் சிறுத்தை அட்டகாசம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் வீட்டுக்குள் நுழைந்து நாய்குட்டியை சிறுத்தை கவ்வி தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நைனிடாலில் உள்ள  குடியிருப்பு இடங்களில், அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகள் அடிக்கடி உலா வரும் சம்பவங்கள் நடக்கின்றன. 

இந்நிலையில் சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த நாய்க் குட்டியை தூக்கிச் சென்றுள்ள காட்சி வெளியாகியுள்ளது.

அக்காட்சியில் திடீரென சிறுத்தை வேகமாக பாய்வதும், இதையறியாமல் ஓடிவந்த  நாய்க்குட்டியை சிறுத்தை கவ்விக் கொண்டு ஓடுவதும், பிறகு நாய்க்குட்டியின் உரிமையாளர் பதறியபடி ஓடிவரும் காட்சியும் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments