காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகை

0 4482
டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீர், மேட்டூர் அணைக்கு வருவதால், அணையின் நீர் வரத்து விநாடிக்கு 2,535 கன அடியில் இருந்து 3,588 கன அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல், தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. காவிரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், அடுத்தடுத்த நாட்களில் நீர் வரத்து   உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 69.99 அடியாகவும், நீர் இருப்பு 32.69 டி.எம்.சி ஆகவும் இருந்தது. நீர் வரத்து சீராக இருப்பதால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி  வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments