டெல்லியில் சுரங்கப்பாதையில் தண்ணீரில் மூழ்கிய ஒருவரின் உடல் கண்டெடுப்பு

0 1226
நீரில் மூழ்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்ட தீயணைப்புத் துறையினர்

டெல்லியில் சுரங்கப்பாதையில் தண்ணீரில் மூழ்கிய ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. டெல்லியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனால் பெருக்கெடுத்துப் பாயும் மழைநீரால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் தண்ணீரில் தத்தளித்தபடி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் புதுடெல்லி ரயில்வே யார்டு அருகே உள்ள மின்டோ சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதில் அரசுப் பேருந்தும், ஆட்டோவும் மூழ்கியுள்ளதாகத் தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் ஆட்டோ ஓட்டுநர், பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை ஏணியின் உதவியுடன் மீட்டனர்.

பேருந்து மூழ்கிய அதே இடத்திலேயே 10 மணி அளவில் தண்ணீரில் ஒரு உடல் மிதந்துள்ளது. இதையறிந்த ரயில்வே பணியாளர் தண்ணீரில் நீந்திச் சென்று அந்த உடலை மீட்டுள்ளார். காலையில் சரக்கு வாகனம் ஒன்று அந்த இடத்தில் மூழ்கியதாகவும், அதை மீட்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி ஓட்டுநர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments