ஷாக் அடிப்பது மின்சாரமா ? மின்கட்டணமா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

0 1338
ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், மின்சாரக் கட்டணம் அநியாயத்துக்கு அதிகமாக உள்ளது என்றும் ரீடிங் எடுத்ததில் குளறுபடிகள் நடந்துள்ளது என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுவதாக தெரிவித்துள்ளார்.

மக்களின் இந்த குரலை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்கான வரும் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை கறுப்புக்கொடி தாங்கி கண்டன முழக்கம் எழுப்பப் போவதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மின் கட்டணத்தில் சலுகை வழங்க வலியுறுத்தி நான்கைந்து பேர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசங்களுடன் முழக்கங்களை எழுப்ப அழைப்பு விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments