தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

0 35557
தமிழகம் முழுவதும் இம்மாத ஞாயிற்றுக் கிழமைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இம்மாத ஞாயிற்றுக் கிழமைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மருந்துக் கடைகள், மருத்துவப் பணி, பால் விநியோகத்திற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை, இறைச்சிக் கடை உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. தேவையின்றி வாகனங்களில் பயணிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. நாளை காலை ஆறு மணி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால், முக்கிய இடங்களில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், தலைநகரான   சென்னையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் தலைநகரான சென்னையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, பாரிமுனை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் அனைத்து மேம்பாலங்களும்,பிரதான சாலைகளை இணைக்கும் சிறு, குறு சாலைகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டன. நகரம் முழுவதும் 193 சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார், தேவையின்றி சுற்றுபவர்கள் மீது வழக்குபதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் காரணமாக நாகையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் காரணமாக கோவையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகரில் 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 54 சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மற்றும் அவினாசி சாலைகளில் முக்கிய இடங்கள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு, மாநகர எல்லைக்குள் உள்ள மேம்பாலங்கள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. 

காஞ்சிபுரத்தில்  தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் காரணமாக பால் கடைகள், மருந்து கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.காஞ்சிபுரத்தில் காந்தி ரோடு, காமராஜர் வீதி, நெல்லுக்கார வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடை, வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஊரடங்கு கட்டுபாடுகள் குறித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் சோதனைசாவடிகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், கன்னியாகுமரியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியுள்ளன. கன்னியாகுமரியில் ஊரடங்கால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. 2000க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் காரணமாக பால் மற்றும் மருந்து கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 

தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் காரணமாக தூத்துக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசிய கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும், காய்கறி சந்தை, மீன் சந்தை, இறைச்சி கடைகளும் மூடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரங்கின் காரணமாக மதுரையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.மதுரையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசியப் பணிகளை தவிர்த்து சுற்றித்திரியும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முழு ஊராடங்கிற்கு மக்கள் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

திருச்சியில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.  சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. திருச்சியில் அத்தியாவசியப் பொருட்களான பால் விற்பனையகங்கள், மருந்தகங்கள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பாலக்கரை, ஜங்ஷன், பழைய பால்பண்ணை, தில்லைநகர் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் சுமார் 2,500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

நாமக்கலில்  தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடியுள்ளன. முழு ஊரடங்கால் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசிய தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்களுக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு ஊரடங்கை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரங்கின் காரணமாக தஞ்சையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சேலத்தில் முழு ஊரடங்கால் ஐந்து ரோடு, சாரதா கல்லூரி சாலை, பழைய பேருந்து நிலையம், சின்னக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி உள்ளிட்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மாநகராட்சி பகுதி முழுவதும் காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments