அஸ்ஸாம் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை 80 பேர் உயிரிழப்பு

0 1610
அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள கனமழை, பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள கனமழை, பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த இருவாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் அனைத்து நதிகளிலும் வெள்ளநீர் அபாய கட்டத்தைத் தாண்டி ஓடுகிறது. பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக ஜோர்கத், தேஸ்பூர், கோல்பரா மற்றும் துபாரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் வெள்ளத்தின் தாக்கம் குறைந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்டமை அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பாதிப்புக்கு உள்ளான மக்கள் தொகை 36 லட்சத்திலிருந்து 28 லட்சமாக குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் இன்னும் 2,678 கிராமங்கள் வெள்ளத்தில் மிதப்பதாகவும், 290 நிவாரண முகாம்களில் 47 ஆயிரத்து 465 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும் பேரிடர் மேலாண்மைப் படையினர் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments