பாதி விலைக்கு 24 கேரட் தங்கக்கட்டிகளைத் தருவதாகக் கூறி மோசடி

0 3985

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாதி விலைக்கு 24 கேரட் தங்கக் கட்டிகளைத் தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி பணம், நகையை பெற்றுக்கொண்டு தலைமறைவானதாகக் கூறப்படும் தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளத்தூரைச் சேர்ந்த மாணிக்கம் - கயல்விழி தம்பதி காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் சற்று வசதியாக இருக்கும் நபர்களை அணுகி,  தங்களிடம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 24 கேரட் தங்கக் கட்டிகள் இருப்பதாகவும் பாதி விலைக்கு அவற்றைத் தருவதாகவும் கூறியுள்ளனர்.

அவர்களின் ஆடம்பரமான தோற்றம், வீடு ஆகியவற்றைப் பார்த்து ஏமாந்து பேராசையில் பலரும் லட்சக்கணக்கில் பணம், நகைகளை கொடுத்துள்ளனர். சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு பணம், 500 சவரன் நகைகள் சேர்ந்ததும் இருவரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் காரைக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments