அசாமில் கனமழை, வெள்ளப்பெருக்கால் 54 லட்சம் பேர் பாதிப்பு

0 1021
அசாமில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வெள்ளப்பெருக்கால் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 76 பேர் உயிரிழந்தனர்.

அசாமில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வெள்ளப்பெருக்கால் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 76 பேர் உயிரிழந்தனர்.

அசாமில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்வதாலும், பிரம்மபுத்திராவிலும், அதன் துணையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் 30 மாவட்டங்களில் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள 76 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு 552 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2 லட்சத்து 40 ஆயிரம் எக்டேர் பரப்பிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காசிரங்கா சரணாலயத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்குள்ள காண்டாமிருகங்கள் நெடுஞ்சாலைகளுக்கும் மேட்டுப் பகுதிகளுக்கும் தப்பிச் சென்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments